முன்னாள் போராளி ஒருவரை நாடுகடத்துவதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

369 0

45016865இந்தியாவில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை நாடுகடத்துவதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

குறித்த உறுப்பினர் போலிக் கடவுச்சீட்டைத் தயாரித்து ஜேர்மனிக்குப் பயணிக்க இருந்த சமயத்திலேயே இந்தியக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

இவர் பூனே விமானநிலையத்தில் ஜேர்மனிக்குப் பயணமாவதற்கு தயாராக இருந்தவேளையிலேயே கைதுசெய்யப்பட்டார்.

இந்தியாவில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களிலும் குறித்த நபர் சம்பந்தப்பட்டதாக இந்தியக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுதன் சுப்பையா என்ற சொந்தப் பெயரினைக்கொண்ட குறித்த நபர் 2005ஆம் ஆண்டுவரை மாரிமுத்து எனும் புனைபெயரில் விடுதலைப்புலிகளின் உறுப்பினராகச் செயற்பட்டவர் எனவும் இந்தியக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவரை சிறீலங்காவுக்கு நாடு கடத்துவதற்காக தற்காலிக விசா ஒன்றை வழங்குமாறு இந்தியக் காவல்துறையினர், சிறீலங்கா காவல்துறையினரிடம் கோரியுள்ளனர். இதற்கமைய குறித்த நபர் அடுத்த வாரமளவில் சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.