வடக்கில் இராணுவத்தினரின் அளவைக் குறைக்குமாறும், பொதுமக்களின் காணிகளை விரைவாக மீள வழங்குமாறும் ஐநா செயலர் பான்கிமூன் தன்னிடம் கோரியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
ஐநா செயலர் சில நாட்களுக்கு முன்னர் இலங்கை வந்தபோது அரசாங்கம் வடக்கில் இராணுவத்தினரின் அளவைக் குறைக்கவேண்டுமெனவும், இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களிடமே திருப்பிக்கொடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார். இந்த விடயம் தொடர்பாக ஐநா செயலர் உங்களிடம் தெரிவித்தாரா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஐநா செயலர், அரசாங்கத்தின் மாற்றத்திற்கான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறு தெரிவித்துள்ளதுடன், நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களையும் அவர் பாராட்டியிருந்தார் எனவும் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.