மலேசியவிற்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு மலேசியாவில் உள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மஹிந்த இன்றைய தினம் செல்வதற்கு திட்டமிட்டமிட்டிருந்த விகாரை ஒன்றின் தேரர் மீது சிலர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரையின் தேரர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தையும் மஹிந்தவுடன் குறித்த சுற்றுலாவில் கலந்துக் கொண்டுள்ளார்.
இதேவேளை இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளியினை சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.