தன்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு பயந்து இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் தில்ருக்ஸி டயஸ் விக்கரிமசிங்க பரிகாரப் பூஜைகள் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இவருக்கென வீடு ஒன்று இருக்கும் போது அரசாங்கத்திடம் தனக்கு வீடு ஒன்றைக் கோருவதாக இவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பாராளுமன்றில் எதிர்கட்சி வெளிபடுத்தியுள்ளதுடன்,இது தொடர்பில் பாராளுமன்றில் தன்னிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதால் அதற்கு அஞ்சியே ஆணைக்குழுவின் தலைவர் தில்ருக்ஸி விக்கிரமசிங்க பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிகார பூஜை தொடர்பிலும் பாராளுமன்றத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த விடயத்தை மேலும் விமர்சிக்க வேண்டாம் என ஆணைக்குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு தகவல் அனுப்பியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.