உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மூலம் அறவிடப்படும் சகல வரிகளையும் அறவிடும் பாரிய பொறுப்பு ஹொங்கொங் நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள தொழிற்சங்க அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் தொழி;ற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வரி அறவிடும் பொறுப்பு McKensey & Company என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த நிறுவனம் 5 வருடத்திற்குள் வரி இலாபமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் வளர்ச்சியைக் காட்டினால் குறித்த நிறுவனத்திற்கு 12 தொடக்கம் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள தொழிற்சங்க அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
குறித்த திட்டமானது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தொழிற்சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
எனினும் குறித்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை மறுதினம் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் சுகயீன விடுமுறையினை அறிவித்து எதிர்ப்பினை தெரிவிக்கவுள்ளதாகவும் இந்தத் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.