கடன் சுமை இல்லாமல் சுயாதீனமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே நல்லாட்சியின் நோக்கம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மிக விரைவில் இதனை யாதார்த்தமாக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தொலைநோக்கு அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து கடனைப் பெறாமல் முதலீடுகளைப் பெற்று பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சரியான வழிகாட்டல்களின் கீழ் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்