நாட்டின் பல பிரதேசங்களிலும் உள்ள அரச பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு தன்னிச்சையான இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
கல்வி அமைச்சின் ஒரு சில அதிகாரிகள்,மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வலய கல்வி அதிகாரிகள் போன்றோரால் தனிப்பட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பழிவாங்கப்படுவதன் நோக்கில் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசியல் அச்சுறுத்தல் இன்றி 4000இற்கும் அதிகமான அதிபர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குளியாப்பட்டியவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசசம் குறிப்பிட்டிருந்தார்.
கல்வி நிர்வாக சேவையின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.