புனிதராகிறார் அன்னை தெரேசா

352 0

CdlMZusUIAA45Puஇந்தியாவில் பாரிய அளவில் வறிய மக்களுக்காக பெரும் சேவையாற்றிய கன்னியாஸ்திரி அன்னை தெரேசா புனிதராக இன்று பிரகடனப்படுத்தவுள்ளார்.

இந்த நிகழ்வை நேரடியா காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஒன்றுகூடி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாப்பாண்டவர் பிரான்சிஸ் முன்னிலையில் இந்த நிகழ்வு வத்திக்கான் நேரப்படி காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, கொல்கத்தாவில் அன்னை தெரேசாவினால் ஸ்தாபிக்கப்பட்ட வறிய மக்களுக்கான அமைப்புக்களில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நோபல் பரிசு பெற்ற அன்னை தெரேசாவினால் ஸ்தாபிக்கப்பட்ட வறிய மக்களுக்கான நிலையங்கள் 19 இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இது தவிர் உலகளாவிய ரீதியாக இவரினால் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்புக்களில் நாலாயிரத்து 500 கன்னிகாஸ்திரிகள் பணியாற்றுகின்றனர்.

கடந்த 1997ஆம் ஆண்டு தமது 87வது வயதில் அன்னை தெரேசா காலமானார்.

தமது 19வது வயதில் கன்னியாஸ்திரியான அவர், இந்திய நகரான கொல்கத்தாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.