தமது பிறந்த ஊருக்கு சென்ற பிரித்தானிய குடியுரிமை பெற்ற 28 வயதான பாகிஸ்தான் நாட்டு பெண் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், அவருடைய மாமனார் மற்றும் முன்னாள் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜுலை மாதம் குறித்த பெண் பஞ்ஜாப் பிராந்தியத்தில் திடீரென மரணமானார்.
அது இயற்கை மரணமே என அவரது மாமனார் மருத்துவ அறிக்கை ஒன்றை சமர்பித்திருந்தார்.
எனினும் பின்னர் அவர், தமது முதல் கணவரால் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது.
குறித்த பெண் கழுத்து நெறித்து கொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் சாட்சிகளை அழித்தமை தொடர்பில், விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.