மன்னார் பள்ளிமுனைப் பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட மூன்று கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதை பொருள், இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரயவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் கடற்படை புலனாய்வுப் பிரிவு மற்றும் வவுனியா விசேட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு ஆகியனவற்றிற்கு கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய மன்னார் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு படகுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது, படகில் ஒரு இந்தியர் உட்பட்ட ஆறு பேர் இரு படகுகளிலும் பயணித்துக் கொண்டிருந்தனர்.
இந்தியரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, தாம் போதை பொருளை கையளிப்பதற்காக இலங்கை வந்ததாக தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது மேலதிக விசாரணைக்காக போதை பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.