மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் அமைதி காக்கும் பணிக்காக இலங்கையைச் சேர்ந்த இராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையணியில் 625 இலங்கை இராணுவத்தினர் இணைத்து கொள்வர் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சி தெரிவித்தார்.
எதிர்வரும் டிசெம்பர் மாதமளவில் இவர்கள் மாலிக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
12 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கும் அதிக விஸ்தீரணத்தைக கொண்ட மாலி, ஆபிரிக்காவின் எட்டாவது பெரிய நாடாகும்.
அல்குவைடா, ஜிஹாத் உட்பட ஐந்து பிரதான அமைப்புகள் மாலியில் செயல்படுகின்றன.
ஏற்கனவே இலங்கைப்படையினர், 1960இல் கொங்கோவிலும், 2004ஆம் ஆண்டு ஹெய்டியிலும், 2010 ஆண்டு லெபனானிலும், அண்மையில் தென்சூடானிலும் அமைதிகாப்பு படைகளில் சேவையாற்றினர்.
இவ்வாறாக 12,210 இலங்கைப்படையினர் வெளிநாடுகளில் சேவையாற்றியுள்ளனர்
இவர்களில் ஐந்துபேர் சேவையின்போது உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.