ரஷியா விமான விபத்து குறித்து புதினிடம் டிரம்ப் தொலைபேசியில் விசாரணை

280 0

ரஷியாவில் நடைபெற்ற விமான விபத்து குறித்து அதிபர் விளாடிமிர் புதினிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் இன்று கேட்டறிந்தார்.

ரஷியாவில் நடைபெற்ற விமான விபத்து குறித்து அதிபர் விளாடிமிர் புதினிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் இன்று கேட்டறிந்தார்.

ரஷியா தலைநகர் மாஸ்கோவில் டொமொடெடொவொ விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து ஆர்ஸ்க் நகருக்கு இன்று உள்ளூர் போக்குவரத்து விமானம் 65 பயணிகள், 6 விமான குழுவினருடன் புறப்பட்டது.

ஆனால், சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ரேடாரில் இருந்து விமானம் காணாமல் போனது. விசாரணையில், மாஸ்கோவின் அர்குனோவோ பகுதியில் அந்த விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணித்த 71 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து மீட்பு பணிகளுக்காக 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களும், 70 வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், ரஷியாவில் நடைபெற்ற விமான விபத்து குறித்து அதிபர் விளாடிமிர் புதினிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் இன்று கேட்டறிந்தார். அப்போது விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a comment