அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருமகள் வெனிசா திடீரென உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வந்த பார்சல் ஆந்த்ராக்ஸ் பவுடராக இருக்கலாமோ என அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருமகள் வெனிசா திடீரென உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வந்த பார்சல் ஆந்த்ராக்ஸ் பவுடராக இருக்கலாமோ என அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இவரது மூத்த மகன் டொனால்டு ஜூனியர், இவரது மனைவி வெனிசா. இவர்கள் மன்ஹாட்டன் நகரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெனிசா வீட்டிற்கு நேற்று காலை தபால் வந்தது. அதை வாங்கிய வெனிசா அந்த தபால் உறையை பிரித்து பா்த்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மேலும், அப்போது வீட்டில் இருந்த வெனிசாவின் தாயார் மற்றும் அவரது வீட்டிலிருந்தவர்கள் என அடுத்தடுத்து சிலரும் பாதிப்பு அடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் வரவ்ழைக்கப்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த வெனிசா மற்றும் உறவினர்களை மீட்டு நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமுடன் உள்ளனர் என டொனால்ட் டிரம்ப் ஜூனியர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடிதத்தின் உறையில் ஆந்த்ராக்ஸ் எனப்படும் கொடிய விஷக்கிருமியை பரப்பும் பவுடர் தடவப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடிதம் பாஸ்டன் நகரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட முத்திரையிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.