பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் கண்டன கூட்டம்!

331 0

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி மாவட்ட தலை நகரங்களில் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடக்கிறது.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட் டணி கட்சிகள் ஏற்கனவே மறியல் போராட்டம் நடத்தி இருந்தன.

அடுத்த கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் கண்ட பொதுக் கூட்டங்களை நடத்துவது என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி மாவட்ட தலை நகரங்களில் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடக்கிறது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூரில் மாலை 6 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார்.

முதன்மை செயலாளர் துரைமுருகன் வேலூரிலும், கடலூரில் கனிமொழி எம்.பி.யும், திருவாரூரில் டி.ஆர்.பாலுவும் பேசுகிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் சென்னையிலும், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரையிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வடசென்னையிலும், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் விழுப்புரத்திலும், முன்னாள் எம்.பி. தா.பாண்டியன் வடசென்னையிலும் பேசுகிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் காஞ்சீபுரத்திலும், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நெல்லையிலும், இந்திய யூனியன் முஸ்லிம் ‘லீக்‘கின் தேசிய தலைவர் காதர் மொகாதீன் ஈரோட்டிலும் கண்டன பொதுக் கூட்டங்களில் பேசுகிறார்கள்.

இதுதவிர அனைத்து மாவட்ட தலைவர்களும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசுகிறார்கள்.

Leave a comment