ரிஷாடின் கட்சிக்கு 150 பிரதேச சபை உறுப்பினர்கள்

272 0

ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 15 மாவட்டங்களில் போட்டியிட்டு சுமார் 150 இற்கு மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம்,அனுராதபுரம், மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய 08 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் களமிறங்கியது.

மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் 34 ஆசனங்களையும், வவுனியா மாவட்டத்தில் 12 ஆசனங்களையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 ஆசனங்களையும், யாழ். மாவட்டத்தில் 01 ஆசனத்தையும், கிளிநொச்சி மாவட்டத்தில் 02 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 ஆசனங்களையும், கொழும்பு மாவட்டத்தில் 02 ஆசனங்களையும், புத்தளம் மாவட்டத்தில் 08 ஆசனங்களையும், அனுராதபுரம் மாவட்டத்தில் 04 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது. மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபையையும், மாந்தை மேற்கு பிரதேச சபையையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனதாக்கிக் கொண்டுள்ளது.

அத்துடன், மன்னார் பிரதேச சபையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமாகின்றது. நானாட்டான் பிரதேச சபையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அக்கட்சி வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment