பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான சம்பினி சூர் மார்ன் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலையின் 16 வது ஆண்டுவிழா 10.02.2018 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. மதியம் 1.30 மணிக்கு சம்பினி சூர்மார்ன் உதவி முதல்வர் Christin Fautre அவருடன் பொருளாதார அபிவிருத்தியின் பொறுப்பாளர் Patrick Le Guillou மக்கள் தொடர்பின் முதன்மையாளர்களில் ஒருவரான Belhassen Blimi அரசியல் பொருளாதார கலாச்சாரம் வேலைவாய்ப்புக்கு பொறுப்பான Marie Kennedy மற்றும் முக்கியமானவர்களில் ஒருவரான Fily Keita> Mamadou SY அவர்களும் இவர்களுடன் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் மேலாளர் திருமதி. அரியரட்ணம் நகுலேசுவரி தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் தேர்வுப் பொறுப்பாளர் திரு. ச. அகிலன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு. மேத்தா. தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன். சம்பின் சூர் மார்ன் தலைவர் திரு வி.றஐPவன் நிர்வாகி திரு.இ. இந்திரகுமார் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றி வைத்து மாணவர்கள். ஆசிரியர்களின் வரவேற்போடு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழ்ச்சோலை மாணவர்களின் தமிழ்ச்சோலை கீதம் பாடப்பட்டது. வரவேற்பு நடனத்துடன் சங்க செயலாளரின் வரவேற்புரையைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை மாணவ மணிகளின் கலைநிகழ்வுகள் இடம் பெற்றன. நிகழ்வில் பிரதமவிருந்தினர்களான உதவி முதல்வர் மற்றும் மாநகரசபை முக்கியஸ்தர்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்களின் ஆசிஉரையும் இடம்பெற்றது. தமது பிரதேசத்தில் வாழும் பல தேசமக்களில் தமிழ் மக்கள் சிறப்பு வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதை தாம் அறிந்து கொண்டிருப்பதாகவும் நீண்ட காலத்தின் பின் அவர்களின் கலைகள் பண்பாட்டை காணக்கிடைத்தமை சந்தோசம் என்றும் தமதுதரப்பில் எல்லாவிதத்திலும் தமிழ் மக்களுக்கு உதவியாக இருப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
ஆண்டு 12 ற்கு மேல் தமிழ்க்கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் பேச்சு> கவிதை> குழுநடனம். சிறுவர் நிகழ்ச்சி; தனிநடம் காவடி வீணை> ஆங்கிலம்; நாடகம்> குழுகிராமிய நடனம்> எழுச்சிபாடல் நடனம் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழ்ச்சோலை தலைமைப்பணியக தேர்வுப் பகுதி பொறுப்பாளர்> மற்றும் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர்> தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர்> பரப்புரைப் பொறுப்பாளர் ஆகியோர் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள்> கேடையங்கள்> பதக்கங்கள் வழங்கி மதிப்பளித்ததோடு> உரையும் ஆற்றியிருந்தார்கள்.
மாணவர்களின் உயர்வான வாழ்விடக்கல்வியோடு அதற்கு நிகராக தாய்மொழி தமிழையும் கற்றுவருவதும் அதற்காக உழைத்து வரும் ஆசிரியர்கள்> பெற்றோர்> தமிழ்ச்சங்கத்தினர் பாராட்டப் பட்டனர். எமது தாய்மொழியை அழித்து அதனை உலகத்திலிருந்து அகற்றி விட நினைக்கின்றவர்களுக்கு சவாலாக புலத்திலே வாழும் தமிழ்மக்களும் எம்எதிர்காலசந்ததியும் தாய்மொழி தம்உயிராக சுவாசித்து வரும் வேளை எண்ணி இன்னும் சில ஆண்டுகளில் எமது குழந்தைகள் தாங்கள் வாழும் நாடுகளில் தமிழுக்கும்> தாய்மண்ணுக்கும் பெருமை சேர்ப்பார்கள். அதற்கு வலுவாக எந்நேரத்திலும் பெற்றோர்களும் மற்றோர்களும் சகல வழிகளிலும் அவர்களுக்கு உறுதியாய் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்கள்.
தமிழ்ச்சோலை ஆசிரியர்களை கல்வி மேம்பாட்டுபேரவையின் மேலாளர் திருமதி அரியரட்ணம் நகுலேசுவரி அவர்கள் பட்டயம் வழங்கி மதிப்பளித்திருந்தார். காலத்தின் தேவையை உணர்த்தும் கலாசாரத்தையும்> மொழியையும்> மண்ணையும் மறக்காது வாழவேண்டும் என்பதற்கு அமைய ஓளவைப்பாட்டியை முன்னிறுத்தி சங்ககாலத்தையும்> நிகழ்காலத்தையும் இணைத்து சமூகநாடகத்தை வழங்கி மக்களின் கரகோசத்தை பெற்றிருந்தனர். தாய்மொழியாம் தமிழில் 12ம் வகுப்பை முடித்த மாணவர்களிடம் அவர்கள் இங்கு பிரான்சு மண்ணிலே பல்கலைக்கழத்திலே என்ன துறையில் கல்விகற்று வருகின்றீர்கள் என்று கேட்டபோது பங்கு பற்றிய 12 பேரில் 10 பேர் தாம் பொருளாதா நிபுணத்துவத்தையும் கணக்கியலாளர்களாகவும் வருவதற்காக கற்பதாகக் கூறியிருந்தார்கள்.
இவ்வாறு தான் யுதர்களும் தமது கல்வியை ஒவ்வொரு துறையிலும் கற்றுவருவதுதோடு பொருளியல்> கணக்கியல்> வங்கி நிர்வாகம் போன்றவற்றையும் கற்று இன்று உலகம் வியக்கு பொருளாதாரத்திலும் தன்னிறைவாக இருப்பதற்கு காரணமாக அமைந்திருந்தது. அதே போலவே ஒருநாள் எமது தமிழ் குமுகமும் பொருளாதாரத்தில் தலைசிறந்து வருவார்கள் என்பதற்கு இந்த மாணவர் ஒரு சாட்சி என்பதைக் கண்டுகொண்டோம். மேலும் இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் தமது தாயக மக்களை மறந்து விடாது அன்றும் இன்றும் தமது மனிதநேயப்பணிகளை ஆற்றிவருகின்றனர்.
காலத்தின் தேவையறிந்து தாய்மண்ணில் அதன் விடுதலைக்கான புனிதப்போரில் தமது அவயவங்கங்களை இழந்து வாழும் மாற்றுத்திறனாளிகளை பொறுப்பெடுத்து தனிப்பட்ட ரீதியில் உதவி வருகின்ற அதே வேளை பிறாங்கோ தமிழ்ச்சங்கத்தினாலும் தாயகத்தில் இன்னும் உதவி தேவைப்படுகின்றவர்களுக்கு உதவும் வகையில் அப்பிரதேசத்தில் வாழும் மனிதநேயம் கொண்ட வர்த்தகர்களின் பெறுமதியான அன்பளிப்புப் பொருட்களைக் கொண்டு நல்வாய்ப்புச் சீட்டு ஒன்றையும் நடாத்தியிருந்தனர். அதனால் பொறப்படும் உதவியைப் பெற்றுக்கொள்பவர்கள் பற்றிய விவரணக்காட்சியையும் திரையில் போட்டுக்காட்டியிருந்தனர்.
அதற்கு உதவிடும் வகையில் மக்கள் அந்த நல்வாய்புச்சீட்டினை பெற்று ஆதரவையும் வழங்கயிருந்தனர். மக்கள் முன்னிலையில் நல்வாய்ப்புச்சீட்டு குலுக்கப்பட்டது. புலத்தில் தாய்மொழியை அழியவிடாது பாதுகாத்து வரும் நாம் எமது மண்ணையும்> அதன் விடுதலையையும்> மறக்காது அதற்காக தம் அவயவங்களை கொடுத்து தங்கள் மக்கள் தங்களை பார்ப்பார்கள் காப்பார்கள் என்ற நம்பிக்கை ஓரளவாவது பூர்த்தி செய்கின்ற இந்த மக்களையும்> அவர்கள் முகங்களையும்> பார்த்து பெரும் நம்பிக்கையோடு மனதில் நன்றியோடும் நிகழ்வின் தமிழ்த்தாய் பாடலையும் மாணவனுடன் சேர்ந்து இசைத்து மனமகிழ்வுடன் வெயியேறினோம்.