சந்திரபாபு நாயுடுக்கு ஜெகன்மோகன் ரெட்டி கண்டனம்

366 0

201609041049550827_drought-area-helicopter-watch-Chandrababunadiu-and-Jagan_SECVPFவெள்ளத்தைதான் பறந்து சென்று பார்வையிடுவார்கள். ஆனால் வறட்சியை ஹெலிகாப்டரில் சென்று பார்ப்பதா என்று சந்திரபாபு நாயுடுக்கு ஜெகன்மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாய பயிர்கள் கருகிவிட்டன. இதையடுத்து கடப்பாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு விவசாயிகள் நலனில் அக்கறை கிடையாது. அனந்தபுரத்தில் மழை இன்றி வறட்சி ஏற்பட்டது தனக்கு தெரியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்த பிறகு தெரியும் என்றும் அவர் கூறுகிறார். மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு வி‌ஷயமும் தனது கம்ப்யூட்டருக்கு நேரடியாக வந்து விடும் என்று கூறினார். ஆனால் வறட்சி பற்றி அவருக்கு தெரியவில்லை.

பொதுவாக வெள்ளத்தை தான் ஹெலிகாப்டரில் பறந்து சென்று பார்வையிடுவார்கள். ஆனால் சந்திரபாபு நாயுடு வறட்சியை ஹெலிகாப்டரில் சென்று பார்க்கிறார். அவர் வாயை திறந்தால் பொய் மட்டுமே பேசுகிறார். விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறினார். ஆனால் அவர் செய்யவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது கடமை. அப்படி இல்லையென்றால் வாக்குறுதி கொடுக்க கூடாது. ஆனால் சந்திரபாபு நாயுடு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து இருக்கிறார். அவரது வழியை மகன் லோகேசும் பின்பற்றி வருகிறார் என்றார்.