மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றும் போராட்டத்தில் அரசாங்கம் – ராஜித சேனாரத்ன

270 0

பிரதமரை மாற்றுவதோ அல்லது அரசாங்கம் இராஜினமா செய்வதற்கோ எந்தவித தேவையும் ஏற்படவில்லை என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சில தரப்பினர் உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தமைக்கு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசாங்கத்தின் குறைகளை சரிசெய்து முன்னோக்கி பயணிப்பதற்கு பிரதமரும் ஜனாதிபதியும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆகும் கனவு அல்லது பொதுத்தேர்தலை நடத்துவதற்கு கனவு காணுவோரின் கனவுகள் நிறைவேறாது என்றும் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு பிரதமர் பதிவியை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ ஐக்கிய தேசியக்கட்சியோ இதுவரையில் ஆலோசனை முன்வைக்கவில்லை.

2015 ஆம் ஆண்டில் தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளமை, ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கே ஆகும். இதனை தொடர்ந்து முன்னெடுப்பதில் சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.

மக்கள் ஆணைக்கு அமைவாக மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment