பாராளுமன்ற தேர்தலைப்போல மக்கள் வாக்களித்தனர் – சம்பந்தன்

262 0

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு இந்­தத் தேர்­த­லில் சில இடங்­க­ளில் ஒரு சிறிய பின்­ன­டையு ஏற்­பட்­டி­ருந்­தா­லும் கணி­ச­மான மக்­கள் எம்­மீது நம்­பிக்கை வைத்து வாக்­கு­களை அள்ளி வழங்­கி­யுள்­ள­னர். அந்த ஆத­ரவை நாம் முழு­ம­ன­து­டன் ஏற்­கின்­றோம். மக்­கள் எங்­கள்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கையை காப்­போம் என எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

தேர்­தல் முடி­வு­கள் தொடர்­பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இது ஓர் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லென்­றா­லும் பாராளுமன்றத் தேர்­த­லைப்­போல கொள்­கை­கள் மற்­றும் கட்சி என்­ப­ன­வற்­றைப் பார்த்து மக்­கள் வாக்­க­ளித்­துள்­ள­னர். வடக்கு கிழக்­கில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கணி­ச­மான இடங்­க­ளில் கூடு­தல் ஆத­ர­வைப் பெற்­றுள்­ளது.

சில இடங்­க­ளில் சிறு பிரச்­சி­னை­கள் இருக்­க­லாம். ஆனால், ஒரு பெரிய பாதிப்­பாக அவற்றை நான் காண­வில்லை. மக்­கள் எம்­மீது வைத்த நம்­பிக்­கையை மீண்­டும் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­னர். அதனை நாங்­கள் பாது­காப்­போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment