தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் இணையாமல் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபையிலும், திருகோண மலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையிலும் மாத்திரமே தனித்து ஆட்சி அமைக்க முடியும். ஊர்காவற்றுறைப் பிரதேச சபையில் ஈ.பி.டி.பி. தனித்து ஆட்சி அமைக்க முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 27 சபைகளில் கூடிய ஆசனங்களையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 2 சபைகளில் கூடிய ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 2 சபைகளில் கூடிய ஆசனங்களையும், சிறிலங்கா பொதுஜன பெரமுன ஒரு சபையில் கூடிய ஆசனங்களையும் பெற்றுள்ளன.
இந்த 32 சபைகளிலும் கட்சிகள் கூடிய ஆசனங்களைப் பெற்றுக் கொண்டிருந்தாலும் ஆட்சி அமைப்பதற்குரிய தனிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது