நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகளானது நடப்பு அரசாங்கத்திற்கு அகௌரவத்தினையே பெற்றுக்கொடுத்துள்ளது என பிரித்தானியாவை தளமாக கொண்டு வெளிவரும் டெய்லி மெய்ல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நடப்பு அரசாங்கத்தினை பரீசீலனைக்குட்படுத்தும் நடவடிக்கையாகும் எனவும், அந்த பத்திரிகை விமர்சித்துள்ளது. அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான அரசியல் உறவானது மேலும் நலிவுற்று போகலாம் என்பதனையே தேர்தல் முடிவுகளில் காணக்கூடியதாக உள்ளதாக அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவினை பெற்றுக்கொண்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சமகால அரசியலில் பாரிய வெற்றியினை கண்டுள்ளதாக இந்திய என் டி டீ வி செய்தி சேவை அறிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த 3 தசாப்தங்களாக காணப்பட்ட யுத்தத்தினை நிறைவிற்கு கொண்டு வந்தமையினாலேயே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு இலங்கை மக்கள் ஆதரவினை வழங்கியுள்ளனர் எனவும் அந்த செய்தி சேவை மேலும் தெரிவித்துள்ளது.