சென்னை ரெயில் பெட்டியில் பணம் கொள்ளை வழக்கு

339 0

201609040818509617_Chennai-train-robbery-case--cpcid-Police-find-clues_SECVPFசென்னை ரெயிலில் ரூ.5¾ கோடி பணம் கொள்ளை வழக்கில் துப்பு கிடைக்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர். சம்பவம் நடந்து 25 நாட்களாகியும் கொள்ளையர்களை நெருங்க முடியவில்லை.

சென்னை ரெயிலில் ரூ.5¾ கோடி பணம் கொள்ளை வழக்கில் துப்பு கிடைக்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர். சம்பவம் நடந்து 25 நாட்களாகியும் கொள்ளையர்களை நெருங்க முடியவில்லை.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு கடந்த 9-ந்தேதி அதிகாலை வந்த சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு வரப்பட்ட ரிசர்வ் வங்கி பணம் ரூ.5¾ கோடி கொள்ளை போய் இருந்தது. ரெயில் பெட்டியின் மேற்கூரை உடைக்கப்பட்டு இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடைபெற்றது.

இந்த கொள்ளை வழக்கை ரெயில்வே போலீசார் முதலில் கையில் எடுத்து விசாரித்தனர். ஆனால் பலன் ஒன்றும் கிடைக்கவில்லை. பின்னர் இந்த வழக்கு தமிழக போலீசார் கைக்கு மாறியது. அதன் பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று சேலம், விருத்தாசலம், விழுப்புரம், சென்னை உள்பட இடங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடைபெற்ற ரெயில் என்ஜின் டிரைவர், உதவி டிரைவர், கார்டு, பணப்பெட்டியுடன் பாதுகாப்புக்கு சென்ற போலீசார், பார்சல் நிறுவன ஊழியர்கள், ரிசர்வ் வங்கி ஊழியர்கள், ரெயில்வே ஊழியர்கள் என்று பலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் பலமுறை விசாரணை நடந்து முடிந்துள்ளது.

ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கொள்ளை சம்பவம் குறித்து இதுவரையில் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இதனால் சம்பவம் நடந்து 25 நாட்களாகியும் கொள்ளையர்களை நெருங்க முடியவில்லை.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.