புதுவையில் ரோந்து பணி போலீசாருக்கு சைக்கிள்

452 0

201609040957194612_Pondicherry-patrol-police-bicycle-Governor-Kiran-Bedi-gave_SECVPFபுதுவையில் குற்றங்களை தடுக்கவும், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் பீட் போலீஸ் திட்டத்தை கவர்னர் கிரண்பேடி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார்.

இதில் மொத்தம் 74 பீட்கள் என பிரிக்கப்பட்டு இரவு மற்றும் பகல் வேளைகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணி மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறுகிய சாலைகளிலும், கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களிலும் எளிதாக ரோந்து பணி மேற்கொள்ளும் வகையில் பீட் போலீசாருக்கு சைக்கிள் வழங்க கவர்னர் முடிவு செய்தார்.

அதன்படி பீட் போலீசாருக்கு ரோந்து பணி மேற்கொள்ள சைக்கிள்களை நேற்று மாலை கவர்னர் கிரண்பேடி வழங்கினார். நிகழ்ச்சியில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன் மற்றும் சுற்றுலாத்துறை இயக்குனர் முனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.