இந்தியாவிலிருந்து 452 அகதிகள் தாயகம் திரும்பினர்!

344 0

4e95a5da6இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டிலிருந்து இலங்கைத் தமிழ் அகதிகள் 452பேர் நாடு திரும்பியுள்ளனர்.இலங்கை இந்திய நாடுகளின் ஆதரவுடனும், ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராயத்தின் ஆதரவுடனும் இவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

இதனை இந்தியாவின் பொதுத்துறைத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.இலங்கை அகதிகள் அனைவரும் தமது சொந்த விருப்பத்தில் தாயகம் திரும்புவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாகவும் பொதுத் துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.