சிறீலங்கா இராணுவத்திலிருந்து நாளை(திங்கட்கிழமை) ஓய்வுபெறப்போகும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ எனும் நூல் நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளது.
சிறீலங்கா இராணுவத்தின் சர்ச்சைக்குரிய தளபதிகளில் ஒருவராக விளங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண இறுதி யுத்தத்தில் 52 ஆவது படைப்பிரிவுக்குத் தலைமைதாங்கினார்.
இவரது படைப்பிரிவுடன் நடைபெற்ற இறுதிச் சண்டையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாரகன் வீரச்சாவடைந்தார் என நம்பப்படுகின்றது.
இவரது படைப்பிரிவினராலேயே தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை செய்யப்பட்டமை உட்பட பல போர்க்குற்ற மீறல்களுக்குப் பொறுப்பாக இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நாளை 5ஆம் திகதியுடன் இராணுவத்திலிருந்து ஓய்வுபெறுகின்றார்.
இவர் ஓய்வுபெற்று மறுநாள் 6ஆம் திகதி இவரால் எழுதப்பட்ட ‘‘நந்திக்கடலுக்கான பாதை’ எனும் நூல் வெளியிடப்படவுள்ளது.
இந்த நூலில் இறுதிக்கட்டப் போர் தொடர்பான பல தகவல்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு தரப்பினர் மத்தியில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.