மாலத்தீவில் இந்திய வம்சாவளி நிருபர்கள் இருவர் கைது

8573 0

ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் இருவரை தேச பாதுகாப்பு என காரணம் கூறி மாலத்தீவில் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அரசியல் குழப்பம் நிலவி வரும் மாலத்தீவில் தற்போது அதிபர் யாமீன் நெருக்கடி நிலையை அமல்படுத்தியுள்ளார். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என கைது வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே, உள்ளூர் செய்தி நிறுவனங்கள் நேற்று மூடப்பட்டன.

இதனால், அங்கு என்ன நடக்கிறது என்பதை வெளியே உள்ளவர்கள் விரைவாக அறிய முடியாத சூழல் உள்ளது. மேலும், சர்வதேச ஊடக நிறுவனங்களின் பணியாளர்கள் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஏ.எப்.பி நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த மணி ஷர்மா மற்றும் ஆதிஷ் ராவ்ஜி படேல் ஆகிய இருவரும் பாதுகாப்பு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a comment