மு.க.ஸ்டாலின் நடத்தும் ஆய்வு கூட்டத்தில் தி.மு.க. வரலாற்று ஆவண படம்

6377 0

மு.க.ஸ்டாலின் நடத்தும் ஆய்வு கூட்டத்துக்கு வெளியே காத்திருப்பவர்களுக்காக தி.மு.க. வரலாற்று ஆவண படம் திரையிட்டு காண்பிக்கப்படுகிறது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் சென்னைக்கு அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார்.

கட்சி நிர்வாகிகளின் குறைகளை கேட்பதுடன் அவர்களது மன ஓட்டத்தையும் அறிந்து கொள்கிறார்.

கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் தைரியமாக கருத்துக்களை சொல்ல புகார் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது.

அதில் தினமும் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் புகார்கள் எழுதி பெட்டியில் போடுகிறார்கள்.

இந்த புகார் மனுக்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுபற்றி மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளிடம் பேசுகையில் நீங்கள் தரும் புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்து வருகிறார்.

எவ்வளவுதான் மன வேறுபாடுகள் இருந்தாலும் தேர்தல் வரும் போது தி.மு.க. தான் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இன்று சேலம் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற் கொண்டார்.

அப்போது ஆய்வு கூட்டத்துக்கு வெளியே காத்திருப்பவர்களுக்காக தி.மு.க. வரலாற்று ஆவண படம் திரையிட்டு காண்பிக்கப்படுகிறது.

தி.மு.க. உருவான காலம் முதல் இப்போதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள், போராட்டங்கள், தேர்தல் வெற்றிகள், அனைத்தும் தொகுத்து காட்டப்படுகிறது.இதை தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வமுடன் பார்த்தனர்.

Leave a comment