பரவிபாஞ்சான் மக்கள் 5ஆவது நாளாகவும் போராட்டம்

423 0

paravipanchan-protest-720x480கிளிநொச்சி மாவட்டம், பரவிபாஞ்சான் பிரதேசத்து மக்கள் இராணுவத்தினரால் அபக்கரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி மீண்டும் 5ஆவது நாளாக தொடர்ந்தும் கவயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பரவிபாஞ்சான் பிரதேசத்தில் மூன்றரை ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த 31ஆம் திகதி குறித்த மூன்றரை ஏக்கர் காணி விடுவிப்பதாகத் தெரிவித்தும் இதுவரை அவற்றையும் விடுவிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குறித்த காணியையும், விடுவிக்கப்படாத ஏனைய காணிகளையும் விடுவிக்குமாறு கோரி கடந்த 31ஆம் திகதி பரவிபாஞ்சான் பிரதேசத்து மக்கள் மீண்டும் தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

போராட்டம் நடாத்திவரும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறித்த பிரதேசங்களை விடுவிப்பதற்காக தமது கட்சி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தும் என உறுதிமொழி வழங்கியுள்ளார்.