தேர்தலில் ஈழத்தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்ன?

535 0

தாயக்கனவுடன் சிறகு விரிந்து வான் உயரப்பறந்த தமிழ் இனம். துரோக வலையில் சிக்குண்டு வேட்டைக்காரனின் அம்பு பட்டு துடிதுடித்து மண்ணில் வீழ்ந்தது.

எஞ்சிய இனத்தில் சிலர் எச்சில் இலைகளுக்காய் ஏப்பம் விடும் நரிகளின் வாலைப்பிடித்து இன்று எஜமான்களாய் வீழ்ந்த இனத்தை மீட்க்கும் மீட்பர்களாய் வீடுகள் தோறும் வீணை வாசிக்கின்றார்கள்.

காலங்காலமாய் நம்பி ஏமாந்த தமிழ் இனம். இனியும் ஏமாரத் தயாராக இல்லை. இனத்திற்காய் சைக்கிள் ரயர்களாய் ஓடித் தேய்ந்தவர்களின் தியாதத்தை நிறைவேற்க்கூடியவர்களும் இம் மண்ணில் பொங்கு தமிழாய் எழுந்துள்ளார்கள் என்ற நம்பிக்கையுடன் வாக்களிக்க காத்திருக்கின்றார்கள்.

தமிழர்களின் இதயத் துடிப்பான தாயகம்,தேசியம்,சுய நிர்ணயம் என்பதனை கவனத்தில் கொண்டு இரு தேசம் ஒரு நாடு ஏதுவோ பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் வாக்களிப்பு நிலையம் நோக்கி பயணிக்கிறனர்.

 

Leave a comment