பங்களாதேஷின் ஜமாத்–இ–இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் தூக்கிலிடப்பட்டார்.

323 0

201609040844244762_Bangladesh-hangs-Islamist-tycoon-Mir-Quasem-Ali_SECVPFபங்களாதேஷின் பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்–இ–இஸ்லாமி அமைப்பின் மூத்த தலைவர் மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டுள்ளார்.

63 வயதான அவர், அந்த அமைப்புக்கு நிதி ஆலோசகராக இருந்ததுடன், பத்திரிகையும் அவர் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

1971ஆம் ஆண்டு பங்காளதேஷ் சுதந்திர போராட்டம் இடம்பெற்ற போது, மிர் காசிம் அலி போர் குற்றத்தில் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தப்பட்டது.

இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் டாக்கா உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார்.

கடந்த மாதம் 30ஆம் திகதி அவருடைய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால் பங்காளதேஷ் ஜனாதிபதிக்கு, மிர் காசிம் அலி கருணை மனுவை அனுப்பினார்.

எனினும் ஜனாதிபதியும் அந்த மனுவை நிராகரித்தார்.

இந்தநிலையில், அவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து டாக்கா நகரில் கடும் பாதுகாப்பு சிறையில் நேற்று மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

போர் குற்றச்சாட்டின் பேரில் பங்காளதேசத்தில் தூக்கிலிடப்படும் 6வது தலைவர் மிர் காசிம் அலி என்பது குறிப்பிடத்தக்கது.