வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2018 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது!

5161 0

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் முதலாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் கடந்த செவ்வாய்க் கிழமை 06.02.2018 அன்று மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.

வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் ஆகிய அமைச்சின் கீழான திணைக்களங்கள் ரீதியான செயற்பாடுகளை வினைத்திறமையுடன் மேற்கொள்வது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதார இழப்புகளைச் சந்தித்தவர்கள் என எவராகிலும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போரின் விளைவாகவே பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள்.

ஆகவே, ஏனைய மாகாணங்களுக்கு ஒதுக்குவதைப் போன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு மத்திய அரசு நிதிகளை ஒதுக்கிவருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விசேட கவனத்திற்குட்படுத்தப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்திட்டங்களை அந்தந்த மாகாண சபையினூடாக முன்னெடுக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற போதிலும் அது குறித்து இதுவரை கருத்திலெடுக்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மகளிர் விவகார அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இவ் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில், ஆலே-hசனைக்குழு உறுப்பினர்களாக விளங்கும் கௌரவ மாகாண சபை உறுப்பினர்கள், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு ஆர்.வரதீஸ்வரன், மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் திரு பொ.வாகீசன், மாகாண தொழிற்துறைத் திணைக்கள பணிப்பாளர் திருமதி உஷா சுபலிங்கம், மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு செயலாளர் மற்றும் மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் திருமதி எஸ்.வனஜா ஆகியோர் இவ் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment