மஹிந்தவின் ஊழல் மோசடிகளை விரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டியது அவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

324 0

mahinda1-415x260முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வெளிநாடுகளில் காட்டப்படும் எதிர்ப்பை, அவருடைய தரப்பு, அடுத்துவரும் உள்ளுராட்சி தேர்தலுக்கான முதலீடாக பயன்படுத்தலாம் என்ற எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 65வருட நிகழ்வையும் புறக்கணித்த மஹிந்த ராஜபக்ச, மலேசியாவுக்கு சென்ற நிலையில் அங்கு தமிழர்களின் உணர்வுமிக்க எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார்.

இது மஹிந்தவின் எதிர்கால வெளிநாட்டு பயணங்களுக்கு ஒரு சவாலாகவே அமைந்துள்ளது.

எனினும் இதனையும் தமது அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள மஹிந்த ராஜபக்ச தரப்பு முனையும் ஆபத்து இருக்கிறது.

இந்தநிலையில் மலேசிய எதிர்ப்பையும் அவரும் அவருடைய தரப்பும், உள்ளுராட்சி தேர்தலில் பிரசாரமாக பயன்படுத்தவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றவும் உத்தியாக பயன்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்தமையை காட்டிலும் சிங்கள மக்களின் இனவாதக்கண்கொண்டோர், மஹிந்தவை, இரட்சராகவே கருதுகின்றனர்.

எனவே அவரும் அவருடைய குடும்பத்தினர் பல கோடி ரூபாய்களை கொள்ளையடித்த குற்றச்சாட்டைக்கூட பொருட்படுத்தாமல், பெருமளவான மக்கள் இன்னும் மஹிந்தவின் பின்னால் செல்கின்றனர்.

இந்தக்கூட்டத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள மஹிந்த உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் சென்று தமக்கு எதிர்ப்பு இருப்பதாக காட்டி தமது பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

எனவே இதனை கட்டுப்படுத்த வேண்டுமானால் இலங்கை அரசாங்கம் மஹிந்தவின் ஊழல் மோசடிகளை விரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டியது அவசியம் என்று அரசியல் மட்டத்தில் கருத்துக்கள் எழுந்துள்ளன.