தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வருகை தந்துள்ள 10 வெளிநாட்டவர்களும் நேற்றைய தினம் பல்வேறு மாவட்டங்களுக்கும் விஜயங்களை மேற்கொண்டதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த கண்காணிப்பாளர்கள் மாலைத்தீவு, இந்தியா, தென்கொரியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலிருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் வருகை தந்துள்ளனர்.
இவர்களினால் தயாரிக்கப்படும் அறிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தவிர, பெப்ரல் அமைப்பினால் நாடு முழுவதும் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள 7 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.