கண்டி மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான சகல வேலைகலும் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் நாளை (10) சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாவட்டத்தின் 925 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்ற வாக்காளர்கள் அனைவரும் காலை வேலையிலே வாக்களிப்பு நிலையங்லுக்கு சென்று வாக்களிக்குமாறும் கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி எச்.எம்.பீ. ஹிட்டிசேகர தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் ஒரு மாநகர சபை உட்பட மூன்று நகர சபை, 16 பிரதேச சபைகள் உள்ளடங்கலாக 20 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நாளை நடைபெறுகின்றன என்பதுடன் இவற்றுக்கு 14 அரசியல் காட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும்
போட்டியிடுகின்றன
கண்டி மாவட்டத்தின தேர்தல் நடைபெற உள்ள 20 உள்ளூராட்சி மன்றங்களான கண்டி மாநகர சபை, கம்பளை நகர சபை, கடுகண்ணாவை நகர சபை, வத்தேகம நகர சபை, பூஜாபிட்டிய பிரதேச சபை, அக்குறணை பிரதேச சபை, ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, யடினுவர பிரதேச சபை, மினிப்பே பிரதேச சபை, உடதும்பரை பிரதேச சபை, உடுநுவரை பிரதேச சபை, மெததும்பரை பிரதேச சபை, உடபலாத பிரதேச சபை, குண்டசாலை பிரதேச சபை, பாததும்பறை பிரதேச சபை, கங்க இகல கோரல பிரதேச சபை, பன்வில பிரதேச சபை, பாதஹேவஹெட்ட பிரதேச சபை, மினிப்பே பிரதேச சபை, தும்பனை பிரதேச சபை, கண்டி ஹதரவட்ட கங்கவட்ட கோரல பிரதேச சபை என்பனவாகும்
புதிய தேர்தல் முறைமைக்கமைய நாளை நடைபெறும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் 2017 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு இடாப்பில் பதியப்பட்டுள்ள வாக்காளர் எண்ணிக்கை கணக்கெடுப்பு படி 10,97,342 போர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பதுடன் கண்டி மாவட்டத்தில் 925 வாக்களிப்பு நிலையங்களும் 368 வாக்கு எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன
கண்டி மாவட்டத்தின் 925 வாக்களிப்பு நிலையங்கலுக்கும் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தேர்தல் கடமை அதிகாரிகள் இன்று முதல் சமூகமளித்துள்ளதுடன் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாரும் சமூமளித்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மத்திய மாகாணத்தில் 42 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன இவற்றில் கண்டி மாவட்டத்தில் 20 உள்ளூராட்சி மன்றங்களும, மாத்தளை மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி மன்றங்களும் நுவரெலியா மாவட்டத்தில் 10 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் நாளை தேர்தல் நடைபெற உள்ளன.