இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

312 0

201609031714328427_Pak-former-minister-blames-India-for-Balochistan-troubles_SECVPFபாகிஸ்தான் பலூசிஸ்தானில் இடம்பெற்று வரும் பிரச்சினைகளுக்கு இந்தியாவே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தானின் உள்துறை முன்னாள் அமைச்சர் ரெஹ்மான் மாலிக் சுமத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் அந்த நாட்டு அரசிற்கு எதிராக பிரிவினைவாதிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பிரிவினைவாதிகளுக்கு இந்தியாவே உதவி செய்து வருகிறது.

இந்தவிடயத்தில் இந்தியாவின் தொடர்பு வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

இந்திய சுதந்திர தினவிழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி பாலூசிஸ்தான் பிரச்சனைக் குறித்து உரையாற்றியிருந்தார்.

இதன்மூலம் பலூசிஸ்தான் உடனான இந்தியாவின் உறவு நன்கு புலப்படுவதாகவும் பாகிஸ்தானின் உள்துறை முன்னாள் அமைச்சர் ரெஹ்மான் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.