நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ, நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ஜலானா கனாலை சந்தித்துள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூ நகரில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக ‘நேபாளத்தின் இமாலயா’ செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியாவின் இடம்பெறவும் ஆசிய அரசியல்வாதிகளின் ஒன்று கூடலின் ஒரு அங்கமாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, மலேசியா சென்றுள்ள மஹிந்த ராஜபக்ஸவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.