ஜீ.கே வாசன் கோரிக்கை

315 0

gkvasanpressmeetஇலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க இந்திய மத்திய அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

முன்னாள் கப்பல்துறை அமைச்சர் ஜீ.கே வாசன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 114 படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படுவதுடன் கைப்பற்றப்படும் படகுகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுகின்றன.

இதன்காரணமாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதாகவும் ஜீ. கே வாசன் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.