வில்பத்து குடியேற்றத்துக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

12429 0

வில்பத்து வனத்திற்கு சொந்தமான சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீள்குடியேற்றம் மற்றும் குடியிருப்புக்கள் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைப் பணிக்குமாறு வேண்டி தொடுக்கப்பட்டிருந்த ரீட் மனு எதிர்வரும் ஜுன் மாதம் 5 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றம் நீதிபதி சிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த ரீட் மனு விசாரணைக்க எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக வனப் பாதுகாப்பு திணைக்களப் பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகாரி, மன்னார் மாவட்ட செயலாளர், அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன், சட்ட மா அதிபர் உட்பட 9 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

Leave a comment