ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி வேறாக்கும் தேவை ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சில உறுப்பினர்களுக்கு மாத்திரமே உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் இடம்பெறவுள்ள குருநாகல் – மாலிகாபிட்டிய விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இந்த ஊடக சந்திப்பில் அமைச்சர்களான மஹிந்த அமரவீர, சரத் அமுனுகம மற்றும் அனுர பிரியதர்ஸன யாப்பா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.