தங்களின் தேவைக்கு ஏற்ப முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ செயற்படாததன் காரணத்தினால், இன்று சர்வதேச சக்திகள் அவருக்கு எதிராக ஒன்று திரண்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா – உடுகம்பொல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்கட்சியின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இன்று, காணி விடுவித்தல் விரைவுப்படுத்த வேண்டும், இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என பான்கி மூன் வலியுறுத்தும் போது, அதனை செய்கின்றோம், சற்று காலம் தாருங்கள் என கோருகின்றனர்.
எனினும் மஹிந்த இவ்வாறு செயற்பட்டது இல்லை.
புலிகளுடன் பேர் வேண்டாம் என்று சர்வதேசம் சொன்னது. மஹிந்த அதனை கேட்கவில்லை.
அதனால்தான் அவருக்கு எதிராக சர்வதேச சக்திகள் ஒன்றிணைந்து சதி செய்து ஆட்சியை கைப்பற்ற உதவி புரிந்ததாகவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.