காவல்துறையினரது சேவையானது, அரசாங்கத்தையோ, அரசியல்வாதிகளையோ பாதுகாப்பது அல்லவென ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
150வது காவல்துறை நிறைவு நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிலையில், அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
காவல்துறை என்பது அரசாங்கத்தை பாதுகாக்கும், அரசாங்க அரசியல்வாதிகளை பாதுகாக்கும் சேவையில் ஈடுபடும் நிறுவனம் அல்ல.
எனினும் கடந்த பல காலங்களாக சில அரசியல் வாதிகள், காவல்துறையினரை தமக்காக பயன்படுத்திக் கொள்ள முனைகின்றனர்.
அதுபோல், சில காவல்துறையினர் அரசியல் வாதிகளுக்கு சார்பாக செயற்பட விரும்பம் கொண்டுள்ளனர்.
இவை இரண்டும் பாரிய தவறாகும்.
மக்களின் நலன்களை முன்னிறுத்திய வகையில் காவல்துறையினரின் கடமைகள் அமைய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.