அதிவேக வீதியில் புதிய வேகக் கட்டுப்பாட்டு இயந்திரம்!

236 0

அதிவேக வீதியில் ஒரு வருடத்திற்கு இடம்பெறருகின்ற மொத்த விபத்துக்களில் 27% இற்கும் அதிகமானவை அதிக வேகம் காரணமாக இடம்பெறுவதாக கணிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நிலமையை கட்டுப்படுத்துவதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் அதிவேக வீதி சுற்றுலாப் பொலிஸ் பிரிவினால் செயற்படுத்துவதற்காக அளவீட்டு இயந்திர கட்டமைப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது.

இந்த புதிய இயந்திர கட்டமைப்பை எதிர்வரும் 14ம் திகதி முதல் நடைமுறைப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அதிவேக வீதி சுற்றுலாப் பொலிஸ் பிரிவு ஆகியன இணைந்து திட்டமிட்டுள்ளது.

இதனூடாக வாகனங்களின் வேகம் கண்காணிக்கப்படுவதுடன், வேகக் கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களின் புகைப்படங்கள் வௌியேறும் வாயிலில் இருக்கும் கணினி ஊடாக அச்சிடப்பட உள்ளது.

இந்தப் புகைப்படங்களில் வாகன இலக்கம், கண்காணிப்பு நேரம் மற்றும் அந்த சந்தர்ப்பத்தில் பயணித்த வேகம் போன்ற தகவல்கள் அச்சிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடுகளை இரவு நேரங்களிலும் முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Leave a comment