பொலி­ஸாரை அச்­சு­றுத்­திய வழக்கில் சந்­தே­க­ந­ப­ருக்கு விளக்­க­ம­றியல் நீடிப்பு!

252 0

புங்­கு­டு­தீவு மாணவி சிவ­லோ­க­நாதன் வித்­தியா படு­கொலை வழக்கில் முத­லா­வது சந்­தே­க­ந­ப­ராக குற்­றம்­சாட்­டப்­பட்­டு ட்­ரயல் அட்பார் நீதி­மன்றால் விடு­விக்­கப்­பட்ட பின்னர் பொலிஸார் ஒரு­வரை அச்­சு­றுத்­திய வழக்கில் தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­கு­மா­ரது விளக்­க­ம­றியல் எதிர்­வரும் 21ஆம் திகதி வரை மேலும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த வழக்­கா­னது நேற்று ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போது இவ் வழக்கு தொடர்­பாக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் இருந்து தெளி­வான அறிக்கை கிடைக்­க­வில்லை என பொலிஸார் மன்­றுக்கு தெரி­வித்­தனர். இத­னை­ய­டுத்தே நீதிவான் மேற்­படி விளக்­க­ம­றியல் உத்­த­ரவை பிறப்­பித்தார்.

குறித்த நபர், மாணவி வித்­தி­யாவின் படு­கொலை வழக்கு விசா­ரணை ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்றில் இடம்­பெற்­ற­போது, ஒரு­முறை வழக்கு விசா­ரணை நிறை­வ­டைந்து செல்­கையில் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ரது பெய­ரினை கூறி அவ­ருக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்­த­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து குறித்த நப­ருக்கு எதி­ராக சாட்­சி­களை அச்­சு­றுத்­திய குற்­றச்­சாட்டில் பிறி­தொரு வழக்கு ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்டது. இந்­நி­லையில் குறித்த நபர் வித்­தியா கொலை வழக்கில் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்ட போதும் பொலிஸாரை அச்சுறுத்திய வழக்கிலேயே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த க்கது.

Leave a comment