பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் 7 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கையை வருவாய்த்துறை மேற்கொண்டுள்ளது.
வங்கிகளிடம் பெற்ற 9000 கோடி ரூபா கடனை திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா மீது பண சலவை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வருவாய்த்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது
அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைக்கு முன்னிலையாக விஜய் மல்லையாவுக்கு பலமுறை அறிவித்தல் அனுப்பப்பட்டது
ஆனால் விஜய் மலலையா நேரில் ஆஜராவதை தவிர்த்து வந்தார்.
இந்தநிலையில், விஜய் மல்லையாவிற்கு சொந்தமான 7000 கோடி ரூபா சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.