அதிவேக நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களை இனங்காண புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவவிருக்கின்றது. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி பயணிக்கும் வாகனங்களை அடையாளம் காண புதிய வேக அளவு கட்டமைப்பொன்றை நிறுவுவதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த சில நாட்களாக பலரின் அவதானம் செலுத்தப்பட்ட போதிலும், அதனை செயற்படுத்துவதற்கான திகதி தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருந்தது. எப்படியிருப்பினும், வீதி அபிவிருத்தி அதிகார சபை நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கைக்கமைய புதிய வேக அளவு கட்டமைப்பு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளது.
வேக அளவு கட்டமைப்பின் ஊடாக வேக அளவை மீறி பயணிக்கும் வாகனங்களின் புகைப்படம், வாகன இலக்கங்கள் உட்பட பல முக்கிய தகவல்களை பதிவு செய்து கொள்ளப்படும். இந்த அறிக்கை உரிய சாரதியிடம் வழங்கப்படுவதுடன், சாரதிக்கு தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்.
இரவு நேரத்திலும், வேக அளவு கட்டமைப்பினால் கண்கானிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் விபத்துக்களில் நூற்று 27 வீதமான விபத்துக்கள் அதிக வேகத்தினால் இடம்பெறுகின்றமையினால் இந்த திட்டம் ஊடாக அந்த விபத்துக்களை குறைத்து கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.