உறுதியளித்தப்படி காணி விடுவிக்கப்படாததன் காரணமாக கிளிநொச்சி – பரவிபாஞ்சான் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று நான்காவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.
எனினும் வாக்குறுதியளிப்படி 15 நாட்களில் காணிவிடுவிக்கப்படாத நிலையில் பரவிபாஞ்சான் பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.