காங்கேசந்துறை கடற் பகுதியில் 3.7 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக கடத்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை (6) சந்தேகத்திற்குறிய படகு ஒன்று தொடர்பாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இருவரும் தங்கக் கட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
100 கிராம் நிறையுடைய 37 தங்கக் கட்டிகளை மறைத்து குறித்த படகில் கடத்திச் சென்று கொண்டிருக்கும் போதே கடற்படையினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் மாதகல் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மீட்கபட்ட தங்கத்தின் பெறுமதி 2 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள், கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகள் மற்றும் டிங்கி இயந்திரம் என்பன மேலதிக விசாரணைகளுக்காக சுங்கப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது