வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர ஸ்லோவேனியா குடியரசிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இன்று அங்கு செல்லவுள்ள அவர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை அங்கிருப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்லேவேனியா துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விடுத்த அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு செல்லவுள்ளார்.
அங்கு செல்லவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரு தரப்பு உறவுகள் குறித்த கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
அத்துடன் அவர் ஸ்லோவேனிய பிரதமர், ஜனாதிபதி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப அமைச்சரையும் சந்திக்கவுள்ளார்.