புகையிலை வரி 90 வீதமாக அதிகரிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

344 0

maithri_2புகையிலை வரியை 90 வீதமாக அதிகரிக்கும் முன்மொழிவை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த முன்மொழியை அதிக காலம் தாழ்த்தாது அங்கிகரிக்க அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மஹரகம அபேக்சா புற்றுநோய் வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதியைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இன்றைய தினம் மேற்கொள்ள வேண்டியதை பிற்போட்டு முழு தேசத்தையும் நோயாளிகளாக மாற்றும் அனர்த்தத்திற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி அனைவரிடமும் கேட்டுக் கொண்டார்.