வான்படை வீரர் விபத்தில் உயிரிழந்திருக்கலாம்

368 0

Vanni090908-1இரத்மலானை வானூர்தி தளத்திற்கு செல்லும் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட வான்படை வீரர் வாகன விபத்தில் இறந்திருக்கலாம் என கல்கிசை நீதவான் தெரிவித்துள்ளார்.

உடலில் காணப்பட்ட வாகன சில்லு தடயங்கள் மற்றும் அருகிலிருந்த சாட்சியங்களுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வான்படை ஊடக பேச்சாளர் கெப்டன் சந்திமர அல்வி கருத்து தெரிவிக்கையில்

அனர்த்தம் இடம்பெற்ற இடத்தில் பெற்று கொண்ட சீ.சீ.டீ.வி காணொளிகளுக்கமைய, அனர்த்தம் இடம்பெற்றதன் பின்னர் அந்த இடத்தில் பயணித்த வாகன சாரதிகளிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கல்கிசை காவற்துறையினரை ஈடுபடுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில போதனா மருத்துவனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட வான்படை வீரர் அகலவத்த பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு செல்வதற்காக நேற்றிரவு அவர் முகாமில் இருந்து வெளியேறியுள்ளதாக வான்படை தெரிவித்துள்ளது.